அசாத் சாலி எதிராக சி.ஐ.டி யில் முறைபாடு பதிவு செய்த தேரர் உள்ளிட்ட குழுவினர்!
srilanka
colombo
crime
By Vasanth
தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்றும் சிலர் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
பௌத்த தகவல் மையத்தின் பணிப்பாளர் வண. அங்குலுகல்லே சிறி ஜினானந்த தேரர் மற்றும் தேசிய முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் ஆகியோரே இவ்வாறு தங்கள் முறைப்பாடுகளைப் செய்துள்ளனர்.
இஸ்லாமிய சட்டம் தொடர்பில் அண்மையில் அசாத் சாலி தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இவர்களால் இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.