கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக சிறைச்சாலைச் சொத்துக்களுக்கு 52 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றிக்காகவே அவரை முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ் சபுவித உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிணையில் விடுவிக்க
குறித்த வழக்கு 54 பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த வழக்கு நேற்றைய தினம் (13.12.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பிரதிவாதிகளும் மன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
ஆகையால் அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ் சபுவித பிடியாணை பிறப்பித்ததாக நீதிமன்றுக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |