உச்சமடையும் அர்ச்சுனா மற்றும் சத்தியமூர்த்தி இடையிலான மோதல்
யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விளக்கமளித்துள்ளார்,
நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) 15 நுழைவாயில்கள் உள்ளன.
நோயாளிகளுக்கு மாத்திரமன்றி பல உயர் அதிகாரிகளும் அவர்களை தொடர்பு கொண்டு சேவையை பெறுகின்றனர். நோயாளிகளை பார்ப்பதற்கும் ஏற்றவகையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதை விடுத்து எம்மை பயமுறுத்தி அல்லது உத்தியோகத்தர்களை பயமுறுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்கின்ற எவரும் அல்லது அது கடவுளாக இருந்தாலும் உள்ளே வர அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் மதிய நேர செய்தி தொகுப்பில் காண்க......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்