குழப்பத்தில் கூட்டம் - அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி கொடுத்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி

By Raghav Dec 13, 2024 05:45 PM GMT
Report

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு (Ramanathan Arjuna) யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (13.12.2024) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையில் 15 நுழைவாயில்கள் உள்ளன.

யாழில் பரவும் எலிக்காய்ச்சல்: வடக்கிற்கு விஜயம் செய்த தொற்று நோயியல் பிரிவு

யாழில் பரவும் எலிக்காய்ச்சல்: வடக்கிற்கு விஜயம் செய்த தொற்று நோயியல் பிரிவு

உள்ளே வர அனுமதி கிடையாது 

நோயாளிகளுக்கு மாத்திரமன்றி பல உயர் அதிகாரிகளும்  அவர்களை தொடர்பு கொண்டு சேவையை பெறுகின்றனர். நோயாளிகளை பார்ப்பதற்கும் ஏற்றவகையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.


ஆனால் அதை விடுத்து எம்மை பயமுறுத்தி அல்லது உத்தியோகத்தர்களை பயமுறுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்கின்ற எவரும் அல்லது அது கடவுளாக இருந்தாலும் உள்ளே வர அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார். 

அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்குள்ள உயர் அதிகாரிகளை என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்பது தவறான விடயம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்ற போது ஒரு சிலர் பல உத்தியோகத்தர்களுக்க கோபம் ஏற்படுகின்ற விதத்தில் நடந்து கொள்ளுவாராக இருந்தால் அவர்களை இனிவரும் கூட்டங்களுக்கு அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

சஜித் அணி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சஜித் அணி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

எலிக்காய்ச்சல் என பரிசோதனை முடிவுகள்

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், 6 பேர் சிகிச்சை அளித்தும் நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

குழப்பத்தில் கூட்டம் - அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி கொடுத்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி | Sathyamoorthy S Reply To Arjuna

இவர்களில் ஒருவருக்கு Leptospirosis (எலிக்காய்ச்சல்) என பரிசோதனை முடிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மூவருக்கு Leptospirosis தாக்கம், ஒருவருக்கு வைரஸ் தொற்று, மற்றொருவருக்கு இருதய கோளாறுடன் வைரஸ் தொற்று என்று நம்பப்படுகிறது.

ஆய்வுக்கூடப் பரிசோதனையின் இறுதித் முடிவுகள் சில தினங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 5 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருமலுடன் காய்ச்சல் உள்ளவர்கள் தாமதமின்றி வைத்தியசாலையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். உடனடி சிகிச்சை பெறும்போது நோயிலிருந்து விரைவாக குணமடையலாம்.

யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்படி சிகிச்சைக்கான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடிப்படை சுகாதார வழிமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனினும் பதட்டம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பியால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி

அர்ச்சுனா எம்.பியால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021