1000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு இல்லை: ரொனால்டோ அதிரடி சபதம்
கால்பந்து அரங்கில் 1000 கோல் அடித்து சாதிப்பேன் என கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருது விழாவில் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கால்பந்து பயணம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 1000 கோல் இலக்கை எட்டும் வரை ஓய்வு பெறப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “காயம் ஏற்படாத பட்சத்தில் 1000 கோல் இலக்கை கண்டிப்பாக எட்டுவேன்.

தொடர்ந்து விளையாட ஆர்வமாக உள்ளேன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா என உலகின் எந்த பகுதியில் போட்டிகள் நடந்தாலும் மகிழ்ச்சியுடன் கால்பந்து விளையாடுகின்றேன்.
கோல் அடிப்பது மற்றும் கோப்பை வெல்வது என கால்பந்து பயணத்தை தொடர விரும்புகின்றேன்.
1000 கோல் என்ற கனவு எண்ணை எட்டுவேதே என் இலக்கு என்பது ரசிகர்களுக்கு தெரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |