சர்வதேச காற்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ரொனால்டோ!
சர்வதேச காற்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு இந்த ஓய்வு முடிவை தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், “போர்த்துக்கல் மக்களுக்கு, நமது தேசிய அணியின் 7ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது.
அதிக கோல்கள் அடித்தவர்
அது பிரத்தியேகமாக என்னுடையது என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை, ஆனால் 23 ஆண்டுகளாக அதை அணியும் பாக்கியமும் பொறுப்பும் எனக்கு இருந்தது.” என காணொளியில் பேசியுள்ளார்.

41 வயதான ரொனால்டோ, போர்த்துக்கல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களை அடித்துள்ளதுடன் ஐந்து முறை பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார்.
ஆண்கள் சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றுள்ளார்.
சமீபத்தில் போர்த்துக்கல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல் காரணமாக ரொனால்டோவுக்கு ஒருமாதம் தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |