10 பில்லியன் ரூபா....! பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் அறிவிப்பு
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை இழந்து விட்டதால், இழப்பீட்டை பணமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பணமாக வழங்க அரசாங்கம் முடிவு
மேலும், டித்வா புயல் மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்காக முதற்கட்டமாக சுமார் 1,872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ் - கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் இதனை தெரிவித்துள்ளார்.
கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம்
நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழு நாட்டுக்கும் சுமார் 10,290 மில்லியன் ரூபாவை முதற்கட்டமாக ஒதுக்கியுள்ள நிலையில், பாதிப்பு குறித்த தரவுகளின் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பில் பிரதேச செயலகங்கள் ரீதியாக இந்த நிதி பங்கீடு செய்யப்படவுள்ளது.

இதில் வடக்கு மாகாணத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளான மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக 954 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணத்துக்கு 365 மில்லியன் ரூபாவும், கிளிநொச்சிக்கு 206 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவுக்கு 189 மில்லியன் ரூபாவும், வவுனியாவுக்கு 158 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உயிர் இழப்புகள் குறைவாக இருந்தாலும், விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பு அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும், மன்னாரில் மட்டும் சுமார் 15,000 கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |