புதிதாக மதுபானசாலைகளை திறப்பவர்களுக்கு பேரிடி
Colombo
Ranjith Siyambalapitiya
By Sumithiran
நாட்டில் மதுபானசாலை ஒன்றை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்ப கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
மதுபானம் திறப்பதற்கு இதுவரையில் அத்தகைய அடிப்படைக் கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை என்றும், மிகவும் சட்டபூர்வமான முறையில் மதுவரி உரிமம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரா பி 4 உரிமத்திற்கு அதிக தேவை இருப்பதால், அந்த உரிமம் வழங்குவதற்கு அடிப்படைக் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் வைப்பிலிடப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வரிச்சுமையை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை
சுற்றுலாத்துறையுடன் இணைந்து உரிமம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த நம்புவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்நாட்டின் பொது மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |