'வாள் ஏந்திய மனிதர்களிடம் சட்டங்களை மேற்கோள் காட்டாதீர்கள்':அராக்சி பதிவு
ரோமானிய தளபதியை மேற்கோள் காட்டி, அமெரிக்காவுக்குப் படுதோல்வி ஏற்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் அமெரிக்காவுக்கு நம்பிக்கை இருந்தபோதிலும், அது தோல்வியை சந்திக்க நேரிடலாம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
"'வாள் ஏந்திய மனிதர்களிடம் சட்டங்களை மேற்கோள் காட்டாதீர்கள்' என்ற சொற்றொடரை, எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும், தனது இறுதிப் போர்த்தொடர் படுதோல்வியில் முடிந்த ஒரு ரோமானியத் தளபதி உரைத்தார்," என்று X தளத்தில் அராக்சி ஒரு பதிவில் எழுதியிருந்தார்.
சிறந்த பொன்மொழி
"போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிய பிறகு அவர் தலை துண்டிக்கப்பட்டார்." “இதைவிடச் சிறந்த பொன்மொழி: 'கடந்த காலத்தை நினைவில் கொள்ள முடியாதவர்கள், அதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்,'” என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, இந்த வாரத் தொடக்கத்தில் ஃபெடரலிஸ்ட் சொசைட்டியின் தேசிய வழக்கறிஞர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையின்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) விமர்சித்து, “வாள் ஏந்திய மனிதர்களிடம் சட்டங்களை மேற்கோள் காட்டுவதை நிறுத்துங்கள்” என்ற பொன்மொழியைக் குறிப்பிட்டிந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |