கிறிப்டோ நாணய பயன்பாடு: இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை
                                    
                    Central Bank of Sri Lanka
                
                                                
                    Nandalal Weerasinghe
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Money
                
                                                
                    Dollars
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் கிறிப்டோ நாணயம் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிறிப்டோ நாணயங்கள்
கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையில் கிறிப்டோ நாணய அலகினை பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்