உலக கிரிப்டோ சந்தையில் பாரிய வீழ்ச்சி!
கிரிப்டோகரன்சி சந்தையில் ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிவு ஏற்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி மதிப்பானது எப்போதும் குறையாது என்ற நம்பிக்கையில் பலர் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபமாக கிரிப்டோ சந்தையிலும் நிலையற்ற தன்மை இருந்து வருகின்றது.
பரிமாற்றத்தின் வீழ்ச்சி
இதன் தொடர்ச்சியில் வெள்ளிக்கிழமையில் வெறும் நான்கு மணிநேரங்களில் 128 டொலர் சரிந்ததுடன், ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிந்துள்ளது.
வியாழக்கிழமையில் இருந்த 3.78 டிரில்லியன் டொலரில் இருந்து, 3.54 டிரில்லியன் டொலர் வெள்ளிக்கிழமையில் சரிவடைந்துள்ளது.
2022 இல் நிகழ்ந்த எஃப்டிஎக்ஸ் (FTX) பரிமாற்றத்தின் வீழ்ச்சியையே நேற்றைய சரிவு நினைவூட்டதாக முதலீட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வர்த்தகத் துறை
அமெரிக்கா (United States) மற்றும் சீனா (China) உறவு நிலையற்றதாக இருக்கும் வரையில் கிரிப்டோ சந்தையும் நிலையாக இருக்க முடியாது.
அத்துடன், அடிப்படை நிதி நிலைமைகள் சரியாக இல்லாத போது, பிட்காயினோ மற்றும் எத்தீரியமோ எதுவானாலும் கிரிப்டோ நாணயங்கள் தங்களின் மதிப்பை நிலைநிறுத்துவதில் சிரமப்படும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்காவை சேர்ந்த வர்த்தகத் துறை இயக்குநர் ஜுவான் பெரெஸ் (Juan Perez) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
