சஞ்சு சாம்சனை விலைக்கு வாங்கிய சென்னை அணி!
Chennai Super Kings
Rajasthan Royals
Sanju Samson
IPL 2026
By Kanooshiya
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான அணிகளில் தற்போது மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
அணியில் மாற்றங்கள்
அணி வீரர்களின் மாற்றங்கள் தொடர்பில் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் இறுதி செய்து வெளியிட வேண்டும் என்பதால், வீரர்களை வாங்குவதிலும் ஏனைய அணிகளுக்கு வழங்குவதிலும் அணி நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
மேலும், இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிககளில் இதுவரையில் ஐந்து முறை சம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |