சென்னை அணியின் புதிய தலைவராக ருதுராஜ்! - தோனியின் இறுதி ஐபில்
அடுத்த ஐபிஎல் தொடரில் தோனியிடம் தலைவர் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்று இந்திய முன்னாள் வீரர் தீப் தேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
16-வது ஐபிஎல் தொடர் கடந்த 31-ம் திகதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 6வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
சென்னை அணி
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவரில் 7 ஆட்டமிழப்பிற்கு 217 ஓட்டங்களை குவித்தது.
சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்குவாட் 57 ஓட்டங்களை பெற்றார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 7 ஆட்டமிழப்பிற்கு 205 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதன் மூலம் லக்னோவை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை வெற்றிபெற்றது.
ருதுராஜ் கெய்குவாட்
இந்நிலையில், தோனிக்கு பிறகு சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்குவாட் செயல்படுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 3 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்குவாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியுள்ளார்.
சென்னை அணியின் தத்துவங்கள் மற்றும் வடிவம், முறை அனைத்தும் ருதுராஜ்க்கு தெரியும். அடுத்த தலைவர் தத்துவ ரீதியில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சென்னை அணி விரும்புகிறதே தவிர வேறு எந்த வழியையும் விரும்பவில்லை.
என்னை பொறுத்தவரை தத்துவ ரீதியில் ருதுராஜ் கெய்குவாட் ஏற்கனவே தகுதியடைந்துவிட்டார்.
அடுத்த ஐபிஎல் தொடரில் டோனியிடமிருந்து தலைவர் பொறுப்பை ருதுராஜ் கெய்குவாட் எடுத்துக்கொள்வார்' என தெரிவித்தார்.
