ஜடேஜாவை ஓரங்கட்டிய அக்ஸர் படேல் - தன்வசமாக்கிய புதிய சாதனை
இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய சகலதுறை வீரர் அக்ஸர் படேல், டி20 போட்டிகளில் 7ம் வரிசையில் அதிக ஓட்டங்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ள வேலையில் இன்றைய தினம் 3வதும் இறுதியுமான போட்டி சௌராஷ்டிரா துடுப்பாட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசல் மெண்டிஸ் - பதும் நிசங்க இணைந்து முதல் ஆட்டமிழப்புக்கு 8.2 பந்துவீச்சுகளை சந்தித்து 80 ஓட்டங்களை குவித்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
அணித்தலைவர் தசுன்
நிசங்க 33 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 31 பந்தில் 52 ஓட்டங்களையும் பெற்றனர். அதன் பிறகு துடுப்பெடுத்தாட வந்த வீரர்களான சரித் அசலங்கா 39 ஓட்டங்களையும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக அதிரடியாக ஆடி 20 பந்தில் அரைசதம் கடந்தார்.
22 பந்துகளை எதிர்கொண்ட ஷானக 56 ஓட்டங்களையோ பெற்றுக்கொடுத்தாதான் மூலம் 20 பந்து பரிமாற்ற நிறைவில் 206 ஓட்டங்களை குவித்தது.
207 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 57 ஓட்டங்களுக்குள் 5 அட்டமிழப்புகளை சந்தித்தது. அதன் பின் களமிறங்கிய சூர்யகுமாரும் அக்ஸர் படேலும் இணைந்து அபாரமாக துடுப்பெடுத்தாடி அரைசதம் கடந்து ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர செய்தனர்.
ஜடேஜாவின் சாதனை
இருவரும் 42 பந்துகளுக்கு 90 ஓட்டங்களை குவித்தனர். 51 ஓட்டங்களுக்குள் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, 31 பந்தில் 65 ஓட்டங்களை குவித்து கடைசி வரை போராடி இறுதி பந்து பரிமாற்ற நிறைவில் ஆட்டமிழந்தார்.
20வது பந்து பரிமாற்ற நிறைவில் 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இந்திய அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குறித்த போட்டியில் , ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த அக்ஸர் படேல், ஜடேஜாவின் சாதனையையே முறியடித்துள்ளார்.
7ம் வரிசையில் இறங்கி 31 பந்தில் 65 ஓட்டங்களை குவித்தடன் மூலம் அக்ஸர் படேல், 7ம் வரிசையில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் 2020ம் ஆண்டு ஜடேஜா 7ம் வரிசையில் இறங்கி அடித்த 44 ஓட்டங்களை பெற்றது சாதனையாக இருந்தது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
