இரண்டாவது போட்டியிலேயே குஜராத் அணிக்கு வந்த சோதனை: இலட்சக்கணக்கில் அபராதம்
குஜராத் அணித்தலைவர் சுப்மன் கில்லுக்கு ஐ.பி.எல் விதிமுறையை மீறிய குற்றச்சாட்டிக்காக இந்தியத் துடுப்பாட்டக் கட்டுபாடு வாரியம் அபராதம் வழங்கியுள்ளது.
நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி (ஸ்லோ ஓவர் ரேட்) மெதுவாக பந்து வீசியதாக குறிப்பிட்டு அணியின் தலைவர் சுப்மன் கில்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இதில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
12 லட்சம் அபராதம்
இதற்கமைய முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஸ்லோ ஓவர் ரேட்டை பேணியதற்காக அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
ரி20 இல் ஒரு மணிநேரம் 25 நிமிடத்திற்குள் 20 ஓவர்களும் முடிந்திருக்க வேண்டும். அதற்கு மேலாக சென்றால் ஸ்லோ ஓவர் ரேட் விதிப்படி 4 களத்தடுப்பாளர்கள் மட்டுமே 30 யார்டு வட்டத்திற்குள் வெளியில் நிற்பது அனுமதி அளிக்கப்படும்.
இந்த விதி மீறப்பட்டதால் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் விதிமீறல்
இது முதல் ஓவர் ரேட் குற்றம் மட்டுமே என்பதால், ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சீசனில் இரண்டாவது முறையாக ஸ்லோ ஓவர் ரேட்டைப் பேணியதற்காக அணி மீது குற்றம் சாட்டப்பட்டால், அணித்தலைவர் ஒரு போட்டித் தடையை எதிர்கொள்வார்.
மேலும் சென்னை அணியிடம் 63 ஓட்டங்களில் தோல்வியடைந்ததால் அது குஜராத் டைட்டன்ஸின் நிகர ஓட்ட விகிதத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |