சென்னை அணியின் அபார துடுப்பாட்டம்: ருத்துராஜ் தலைமையில் முதல் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிகொண்டுள்ளது.
20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெங்களூரு அணி பெற்று சென்னை அணிக்கு நிர்ணயிர்த்திருந்தது.
இந்நிலையில், 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்து தனது முதலாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதலாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அத்தோடு, சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார்.
மேலும், பெங்களூரு அணி சார்பில் அனுஜ் ராவத் அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
முதலாம் இணைப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் நாணயசுழற்சியில் பெங்களூரு அணி வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரானது இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணி
இந்நிலையில் தொடக்க நாளான இன்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இந்த தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |