கொழும்பின் சகல பகுதிகளிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறை
ஊரடங்கு
கொழும்பின் சகல பகுதிகளிலும் இன்று மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டாபய மற்றும் ரணில் பதவி விலகாத காரணத்தினால் இன்றும் பாரிய ஆர்பாட்டங்கள் முன்னெடுக்ககூடும் என்ற அச்சத்தில் கொழும்பின் பல பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று பிற்பகல் அளவில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நேற்று இரவு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்திருந்தது.
இந்த நிலையில் நேற்று பிறப்பிக்கப்பட்ட நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை ஐந்து மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/022d4666-6af0-4fb2-976d-c23499925e8e/22-62cfb90a031ce.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)