இந்த ஊரடங்கால் எவ்வித பயனுமில்லை - வெளிவந்த அதிருப்தி
curfew
useless
disapoint
By Jaso
நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து தொடரச்சியாக நீடிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் சரியாக அமுல்படுத்தப்படாவிட்டால், ஊரடங்கை நீடிப்பதில் பயனேதும் இருக்காது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிப்பது மிகக் குறைந்தளவான மட்டத்திலேயே உள்ளது. வாகனங்களும் பொதுமக்களும் தேவையில்லாமல் வீதிகளில் பயணம் செய்கிறார்கள்.
மேலும், பலர் அத்தியாவசிய சேவைகளை தவறாக பயன்படுத்துவதாக தெரிகிறது.
எனவே, இந்த ஊரடங்கு நீடிக்கப்படுவது பயனுள்ளதாக இருக்காது என்று அவர் மேலும் தெரிவித்தார்.