ஊரடங்கு காலத்தில் விமான நிலையம் செல்வோர், வெளியேறுவோருக்கு வெளியானது அறிவிப்பு
curfew
srilanka
airport
Diplomatic staff
By Sumithiran
இலங்கையில் நாளையதினம் ஊரடங்கு காலத்தில் விமான நிலையம் மற்றும் இராஜதந்திரிகள் பயணிப்பதற்கான வழிமுறையை காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அஜித் ரோகண வெளியிட்டுள்ளார்.
இதன்படி விமான நிலையத்திற்கு செல்வோர் மற்றும் விமான நிலையத்திலிருந்து வருவோர் தமது விமான பயணச்சீட்டை காண்பிக்க முடியும்.
அதேபோன்று இராஜதந்திர ஊழியர்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தமது சேவை அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை அத்தியாவசிய சேவைகள் என உறுதிப்படுத்தும் இலத்திரனியல் ஆவணத்தை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர் என அவர் அறிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி