ஊரடங்கு உத்தரவை மீறிய பலர் கைது!
curfew
srilanka
police
colombo
arrested
gotabaya
By S P Thas
இலங்கையில் தற்போது ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க தயாராக இருந்த நிலையில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி