பிரிட்டனில் அமுல்படுத்தப்படுமா ஊரடங்கு? பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிட்ட அறிவிப்பு
curfew
u k
borris johnson
By Sumithiran
பிரிட்டனில் இனி கொரோனா ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்த பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வரும் ஜனவரிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரசுக்கு எதிரான ஆற்றலை உடலில் பெருக்கிக் கொள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
புதிய மாறுபட்ட வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை ஏற்படாது என்றும், அதேநேரம் மக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றார். இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ், உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கட்டாயம் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்