தவறான கொள்கைகளைப் பின்பற்றும் தற்போதைய அரசாங்கம்
தற்போதைய அரசாங்கம் தவறான கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பதாகவும், இவர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாணந்துறையில் நேற்று (4) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மொட்டு - யானை அரசாங்கம்
“ராஜபக்ச குடும்பம் இந்நாட்டை அழித்து வறிய நிலைக்கு இட்டுச் சென்றதாகவும்,சிறு குழந்தை முதல் முதியவர் வரை,அரச ஊழியர் முதல் கூலித் தொழிலாளி வரை அனைவரினதும் இயல்பு வாழ்க்கை வீழ்ந்துள்ளது.
இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் இனி எந்த ஆட்சியாளருக்கும்,தலைவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிமைகள் அல்ல.
ராஜபக்சவின் அடிமைத்தனத்தை இன்னமும் உறுதிப்படுத்தும் மொட்டு - யானை அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான முதல் நடவடிக்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்படும்.
உலகில் எந்த நாடும் பொருளாதாரத்தை சுருக்கி பிரச்சினைகளைத் தீர்த்ததாக இல்லை. தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி நாட்டு மக்களை அழிக்க முயல்கிறது.
வீழ்ச்சியிலிருந்து மீள
தேவையை குறைப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள் என்றாலும்,அது தவறு .
இந்த பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதே ஒரே தீர்வு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்