அரசின் மீதான மக்களின் நம்பிக்கை: ஆய்வில் வெளியானது உண்மை
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டை இலங்கையில் 85 வீதமான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என வெரித்தே ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயமானது, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதத்தை விடவும் பெப்ரவரி மாதத்தில் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம்
அதன் அடிப்படையில், ஒக்டோபர் மாதத்தில் 9 சதவீதமாக இருந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கை பெப்ரவரியில் 7 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், நாட்டின் பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருப்பதாக 91 சதவீத மக்கள் கருதுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருவதாக 90 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் 9 சதவீதம் பேர் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் நல்ல அல்லது சிறப்பான அளவில் இருப்பதாக கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |