கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
SLPP
Ranil Wickremesinghe
Sri Lanka Cabinet
By Vanan
எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அதிபருக்கு விசுவாசமான உறுப்பினர்களுக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான பட்டியலை அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும் அவர்களில் பலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அதிபர் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீண்ட நாட்களாக அமைச்சுப் பதவிகளுக்காகக் காத்திருந்த பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர், அமைச்சுப் பதவி கிடைக்காவிடின், தமக்கு வழங்கப்படுகின்ற ஆதரவு தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடும் என கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளை மதியநேர செய்திகளின் தொகுப்பில் பாருங்கள்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி