பாடசாலை மாணவர்களுக்கான உணவு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் எண்பத்தைந்து ரூபாவை நூற்றி பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய விலையில் மதிய உணவை வழங்க முடியாது என வழங்குநர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அண்மையில் இத்தொகை அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றதுடன், இதில் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மீள்பரிசீலனை
ஒரு வேளை உணவுக்கு நூற்றி பதினைந்து ரூபா வழங்கினால் போதும் எனவும், சந்தையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களின் விலைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அடுத்தவாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இதுவரை பத்து இலட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் பலனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |