இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் வெடித்த பதற்றம் : சிக்கிய இலங்கை
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் கடந்த சில நாட்களாக மோதல் சூடுபிடித்துள்ள நிலையில் இது போர் வெடிப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் கடந்த 21 ஆம் திகதி அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.
இந்த சம்வத்தில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் உலகளவில் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உலகளாவிய ரீதியில் பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பு இது திட்டமிட்டு சுமத்தப்படுகின்ற பலி எனவும் ஆதாரமிருந்தால் நிறுபித்து காட்டுங்கள் எனவும் சவால் விடுத்திருந்தது.
இந்தநிலையில், தற்போது இவ்விடயம் இந்திய தரப்புக்கு மத்தில் பாரிய கோவத்தை எழுப்பியுள்ள நிலையில், இது போருக்கான வலுவான பாதையை அமைத்து கொடுப்பதாக காணப்படுகின்றது எனவும் இந்திய தரப்பு மற்றும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், இந்த போர் குறித்த பிண்ணனி, இதனால் எழப்போகும் சிக்கல், போர் எழுந்தால் இந்தியாவிற்கு அண்டைய நாடான இலங்கையின் பாதுகாப்பு எவ்விதத்தில் இருக்கும், இது குறித்து இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளபோகும் நடவடிக்கை என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
