ட்ரம்புடனான பேச்சுவார்த்தை: சீனா முன்வைத்த நிபந்தனை
அமெரிக்காவுடனான (USA) வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா (China) மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா மீதான அமெரிக்காவின் வரி சர்வதேச அளவில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், நிலைமையை சரி செய்ய பேச்சுவார்த்தையை தொடங்க ட்ரம்ப் முன்வந்திருக்கிறார். எனினும், வரியை குறைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என சீனா உறுதியாக கூறியிருக்கிறது.
வரி விதிப்பு பற்றிய பேச்சுவார்த்தை
அண்மையில், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பில் சீன வெளியுறவுத்துறை தெரிவிக்கையில், "வரி விதிப்பு பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
பூனைக்கு மணியை கட்டியவர்கள்தான் அதை அவிழ்க்க வேண்டும்.
சீனாவின் நிபந்தனை
பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் எனில் முதலில் வரியை குறைக்க வேண்டும். அதற்கு பின்னர்தான் பேச்சுவார்த்தையே தொடங்கும். " என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக போர் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சீனாவின் நிபந்தனைக்கு ட்ரம்பின் நிலைப்பாட்டை மூன்றாம் தரப்பு நாடுகள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
