சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
புதிய இணைப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாட்டின் ஊடாக 15 தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இலங்கை அரசிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் புதிய அரசியல் யாப்பு, மாகாணசபைத் தேர்தல், பயங்கரவாத தடைச் சட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்திய இன அழிப்பு போர்க் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட 15 விடயங்கள் இந்த மாநாட்டின் ஊடாக வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - த.பிரதீபன்
முதலாம் இணைப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) முதலாவது பேராளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.
சாவகச்சேரி நகரசபை பொன் விழா மண்டபத்தில் இன்றைய தினம் காலை (22) 10 மணியளவில் இந்த மாநாடு ஆரம்பமானது.
இம்மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் பாட்டு பாடப்பட்டது.
கட்சியின் எதிர்கால செயற்பாடுகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பேராளர் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள், கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |




