முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து வெளிவந்த தொல்பொருள் அடையாளங்கள்!

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Keethan Dec 12, 2025 08:10 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்தின் கீழ் வான்பாயும் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட நிலையில் வாய்பாய்ந்ததில் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.

முத்தையன் கட்டுகுளத்தின் வான்பாயும் தண்ணீரை ஆற்றுக்கு கொண்டுசெல்லும் பகுதி முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது இதனை சீர்செய்யும் நடவடிக்கையில் படையினர் மக்கள் பொதுமக்கள் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இந்த நிலையில் முத்தையன்கட்டு குளத்தின் வான்பாயும் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதை சில சுயாதீன ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மன்னாரில் மேலும் இரு காற்றாலை மின் திட்டங்கள்: அமைச்சரவை அனுமதி!

மன்னாரில் மேலும் இரு காற்றாலை மின் திட்டங்கள்: அமைச்சரவை அனுமதி!

முத்தரையர்-சோழர் காலம்

இந்தச் சேதங்கள் ஒரு நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட இழப்பாக மட்டும் அமையாமல், மன்னர் காலத்து முத்தரையர்-சோழர் காலம் பண்டைய வரலாற்றுக் கட்டமைப்புகளை மீண்டும் வெளிக்கொண்டுவரும் அரியதொரு வாய்ப்பாக மாறியுள்ளது.

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து வெளிவந்த தொல்பொருள் அடையாளங்கள்! | Current Status Of Muthaiyan Kattukulam

சேதத்தில் வெளிப்பட்ட அதிசயப் பொக்கிஷம் பழைய கட்டுமானங்கள் குளத்தின் கீழ் கட்டுமானப் பகுதிகள் சேதமடைந்ததால், பழங்காலக் கட்டிட அமைப்புகளின் எச்சங்கள் தற்போது நிலமட்டத்திற்கு மேலே தெளிவாகக் காட்சியளிக்கின்றன.

இது, குளத்தின் வரலாறு மற்றும் அதனைச் சுற்றியிருந்த நாகரிகம் குறித்த புதிய ஆய்வுகளுக்கு வழிகாட்டியுள்ளது.

வெளித்தெரியும் இந்தச் சிதைவுகளுக்கு மத்தியில், பண்டைய புதையல் அல்லது தொல்லியல் எச்சங்களைக் காணக்கூடியதாக இருப்பது, அப்பகுதி ஒரு காலத்தில் செழிப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்திருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

கொத்மலை அணைக்கட்டின் உடைப்பு! விளக்கம் வழங்கியுள்ள அரசாங்கம்

கொத்மலை அணைக்கட்டின் உடைப்பு! விளக்கம் வழங்கியுள்ள அரசாங்கம்

வரலாற்றுத் தொடர்பு

ஆய்வுகளின்படி, முத்தையன்கட்டு குளம் சோழர் ஆட்சிக் காலத்தில் முத்தரையர் என்ற இனக் குழுவினரால் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தச் சிதைவுகள் அந்த வரலாற்றுத் தொடர்பை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான கள ஆதாரங்களாக அமைகின்றன.

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து வெளிவந்த தொல்பொருள் அடையாளங்கள்! | Current Status Of Muthaiyan Kattukulam

இந்நிலையில் இவ்வாறு செய்திகள் வெளிவந்துள்ள பின்னணியில் குறித்த தகவல் தொல்பொருள் திணைக்களத்தின் பார்வைக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன்படி குறித்த பகுதிக்கு சென்ற தொல்பொருள்திணைக்கள அதிகாரிகள் அந்த தொல்பொருள் சின்னத்தினை சுற்றி அடையாளப்படுத்தி  தொல்பொருள் மரபு தொடர்பில் தெரிவித்து இதில் எந்த பணியும் மேற்கொள்ளவேண்டாம், அதற்கான உரிய கடிதம் எழுத்துமூலம் வரும் என நீர்பாசன திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி