இன்று மாலை நாட்டில் சில இடங்களுக்கு இடியுடன் கூடிய மழை
Sri Lanka
Climate Change
Weather
Rain
By Pavi
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பனிமூட்டமான வானிலை
அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி