விஷ ஊசி மரணதண்டனை முயற்சிக்குப் பின்னர் முதல்முறையாகப் பேசிய அமெரிக்கக் கைதி
தவறான முறையில் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய அமெரிக்க மரணதண்டனைக் கைதியான கிறிஸ்டா பைக் (Krista Pike), இச்சம்பவத்திற்குப் பின்னர் தனது முதலாவது பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த இரவுக்குப் பின்னர் வலியற்ற ஒரு தருணத்தைக்கூட தாம் அனுபவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனது உடல், கைகள் மற்றும் தொண்டைப் பகுதிகளில் தொடர்ந்தும் வலி இருப்பதாகவும், பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டா பைக்
உடல் ரீதியான பாதிப்புகளுக்கு மேலதிகமாக, உளவியல் மற்றும் உணர்வு ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

50 வயதான கிறிஸ்டா பைக்கிற்கு, கடந்த செப்டம்பர் மாதம் 'பென்டோபார்பிட்டால்' (Pentobarbital) என்ற மருந்து இருமுறை ஊசி மூலம் செலுத்தப்பட்டபோதிலும், அவர் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த மாத இறுதியில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |