யுக்ரைன் தொடருந்து நிலையம் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 14 பேர் பலி
யுக்ரைனின் டினிப்ரோ (Dnipro) நகரிலுள்ள தொடருந்து நிலைய நடைமேடையை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (29) இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய பேரவையின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, இந்தத் தாக்குதலைக் “கொடூரமான மற்றும் அழிவை ஏற்படுத்தும் தாக்குதல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடும் கண்டனம்
அத்துடன், ரஷ்யா மீதான சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், ரஷ்யா மேலும் பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாகத் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டினிப்ரோ நகரில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதலின்போது மாணவர் விடுதியொன்றில் தீ பரவியுள்ளதுடன், சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |