101 ஆடுகள் வெட்டி சாய்ப்பு : ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா
தமிழகம் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நூறு ஆடுகள் வெட்டப்பட்டு 100 மூடை அரிசியில் சமையல் செய்து ஆண்கள் மட்டுமே உண்டு மகிழும் விநோத திருவிழா வருடாந்தம் இடம்பெற்று வருகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில், காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயிலிலேயே இந்த விநோத திருவிழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி
மார்கழி மாதமே இந்த திருவிழா நடைபெறும்.இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்கமுடியாது.
இந்த விழாவில், பலியிடப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. வளரும் இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள்.
101 ஆடுகள் பலியிடப்பட்டு 100 மூடை அரிசியில் சோறு
நேற்று காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடக்கினர். பின்னர்,நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 101 ஆடுகள் குறிப்பாக கருப்பு ஆடுகள் மட்டும் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன.
100 மூடை அரிசியில் சோறு தயாரான இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது.
இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |