அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Colombo Sri Lanka Prasanna Ranatunga
By Sathangani Jan 07, 2024 06:05 AM GMT
Report

இலங்கையின் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50 வீதமானவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் 14,542 பேர் வசித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக 50 சதவீதம் பேருக்கு வீட்டுரிமைப் பத்திரம் வழங்கப்படும்.

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை


பிரசன்ன ரணதுங்க பணிப்பு 

இதேவேளை மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்க சிறிது காலம் எடுக்கும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகின்றது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | 50 Of The Apartment Dweller Have Home Equity Bonds

அந்த பிரச்சினைகளை தீர்த்து அடுத்த வருடம் ஏனைய குழுவிற்கு உரிமைப்பத்திரங்களை வழங்குமாறு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தமக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் முக்கிய நிறுவனங்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியனவாகும்.

வடக்கு காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு விரட்டியடிப்பு

வடக்கு காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு விரட்டியடிப்பு


ரணில் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனம்

அதிபர்  ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குவது துரிதப்படுத்தப்படும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | 50 Of The Apartment Dweller Have Home Equity Bonds

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வருடம் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வருடத்திற்கு 22 அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளதாக  தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னர் அதில் மொழிப் பிரயோகம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரியை கடித்துவிட்டு தப்பியோட்டம்

காவல்துறை அதிகாரியை கடித்துவிட்டு தப்பியோட்டம்


பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டம்

இதேவேளை, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த முதல் உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | 50 Of The Apartment Dweller Have Home Equity Bonds

இதன்படி, பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் வீட்டு அலகுகளின் முதல் உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு அனுமதி கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டம் என்பது, அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டமாகும்.

மேலும் இது நவீன வசதிகளுடன் கூடிய 24 மாடிகளைக் கொண்டுள்ளது. இந்த வீட்டு வளாகத்தில் 608 வீட்டுத் தொகுதிகள் மற்றும் 5 வர்த்தக தொகுதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதி விபத்துக்களில் ஒரே நாளில் ஐவர் பலி

வீதி விபத்துக்களில் ஒரே நாளில் ஐவர் பலி



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி