வெளிநாடுகளில் இருந்து வந்த பொதிகள் -அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி(photo)
colombo
post office
custom
parsel
By Sumithiran
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களுக்கு என அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்படி 10 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு கடமைகளின் போது, குறித்த பொதிகளில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப்பொதிகள் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளுக்காக போதைப் பொருட்கள் இலங்கை காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி