வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான சரக்குமுனையத்திற்கு வந்த 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் அடங்கிய பொதியை இலங்கை சுங்கப் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமானம் மூலம் நாட்டிற்கு வந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை விமான சரக்கு பிரிவின் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தடுத்து வைத்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
பார்சலில் சுமார் 2.5 கிலோகிராம் கொக்கெயின்
பிரேசிலில் இருந்து உள்ளூர் சரக்குதாரர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட பொதியில் சுமார் 2.5 கிலோகிராம் கொக்கைன் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
நேற்று பிற்பகல் பொதியை பெறுவதற்காக விமான நிலையம் வந்தவரை அதிகாரிகள் கைது செய்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.125 மில்லியனுக்கும் அதிகமான தொகை
ஒரு கிராம் கொக்கைன் தற்சமயம் ரூ.50,000 மதிப்புடையது மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூபாய் 125 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.