அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு
மற்றுமொரு முடக்கல் நிலை ஏற்பட்டால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் ‘கட்’ செய்யப்படுமென அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்த நிலையில் அவ்வாறு சம்பளத்தை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இது தொடர்பில் கூறுகையில்,
ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதிக்கு நன்கொடையாக அளிக்கும் அமைச்சரவை முடிவு அரச துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்று தெரிவித்தார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஒகஸ்ட் மாத சம்பளத்தை நிதிக்கு வழங்க அமைச்சரவை நேற்று முடிவு செய்திருந்தது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு அரச துறையிலோ அல்லது தனியார் துறையிலோ கூட ஊதியக் குறைப்புக்கான முயற்சியாகும் என்ற தகவலில் உண்மையில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.