ரணிலுக்கே எமது ஆதரவு: இ.தொ.காவின் மத்திய குழு கூட்டத்தில் முடிவு
Ranil Wickremesinghe
President of Sri lanka
Jeevan Thondaman
By Kiruththikan
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு
இன்று நடைபெற உள்ள சிறிலங்காவின் புதிய அதிபருக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
நேற்று (19) நடைபெற்ற இ.தொ.காவின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ரணில் விக்ரமசிங்கவே சிறந்த தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Ceylon Workers' Congress, after much deliberation, has decided to support Hon. @RW_UNP in his bid for presidency.
— Jeevan Thondaman (@JeevanThondaman) July 19, 2022
We also wish @DullasOfficial and @anuradisanayake the best for tomorrow.
நீண்ட கலந்துரையாடலின் பின்னர், கட்சியின் மத்திய குழுவின் ஆதரவைப் பெற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முழு ஆதரவையும் வழங்க இ.தொ.கா தீர்மானித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி