வெளிநாடொன்றில் அரச நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய சைபர் தாக்குதல்
Cyber Attack
Singapore
World
By Shalini Balachandran
சிங்கப்பூர் நாட்டில் ஒரு சக்திவாய்ந்த சைபர் தாக்குதல் இடம்பெற்று்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சைபர் தாக்குதல் அரசு நிறுவனங்கள் உட்பட முக்கிய அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கே.சண்முகம், இந்த சைபர் தாக்குதல் UNC 3886 என அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நிவர்த்தி நடவடிக்கை
சிங்கப்பூரில் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் உள்ள அமைப்புகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்