வியட்நாமை கடும் சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து: 34 பேர் பரிதாபமாக பலி
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 34 பேர் பலி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சென்று கொண்டிருந்த படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹா லாங் கடலோர பகுதியில் திடீரென குறித்த சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
மீட்புப் படையினர்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் கடலில் தத்தளித்த 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
இருப்பினும் விபத்தில் எட்டு குழந்தைகள் உள்பட 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தேடும் பணி
மாயமான எட்டு பேரை தேடும் பணி நடந்து வருவதுடன் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக மீட்புக் குழுவினர் கருத்து தெரிவிக்கையில், திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதுடன் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
