பொதுமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஜூலி சங் கோரிக்கை
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டுமென அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் தொழில்நுட்ப துறையினர், சிவில் சமூகத்தினர் மற்றும் பலதரப்பட்ட நிபுணர்களின் கருத்தினை உள்வாங்குவது அவசியம் என அமெரிக்க தூதுவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்
இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சர்வதேச தரம் மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, திருத்தியமைக்க, இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுமாறும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
(1/2) As Sri Lanka deliberates the Online Safety Bill, it's crucial to include input from the tech sector, civil society, and diverse experts. Preserving freedom of expression is essential—it's a fundamental right that is non-negotiable and must be safeguarded.
— Ambassador Julie Chung (@USAmbSL) September 30, 2023