லண்டன் முதல் ஜெனிவா வரையிலான ஈருருளிப் பயணம் 4ஆவது நாளாக தொடர்கிறது
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து 4ஆம் நாளாக நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று (05) நெதர்லாந்து பிரேடா மாநகரசபை முன்றலில் இருந்து பெல்சியம் நோக்கி பயணிக்கின்றது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அமர்வை மையப்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் அனைத்துலக விசாரணை கோரும் பரப்புரை செயற்பாடுகள் மேற்குலக நாடுகளில் தொடர்ந்து வருகின்றன.
அந்த வகையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான ஈருருளிப் பயணம் இன்று காலை 4 ஆவது நாளை நெதர்லாந்தின் பிறேடா நகரில் இருந்து ஆரம்பித்து பெல்ஜயம் நோக்கி பயணித்துவருகிறது.
இன்றைய நிகழ்வில் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் ஜெயாவும் கலந்துகொண்டிருந்தார்.
இதேபோலவே பிரான்சில் உள்ளுராட்சி கட்டமைப்புகளை சந்தித்து தமிழினத்துக்கு நீதிகோரும் பரப்புரை செயற்பாடுகள் இன்று ஐந்தாவது நாளாக இடம்பெற்று வருகின்றன.