யாழ்ப்பாணத்திலும் வெடித்துச் சிதறியது எரிவாயு அடுப்பு - அச்சத்தில் மக்கள் (காணொளி)
Jaffna
cylinder
Exploded
Gas stove
By MKkamshan
யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.
கந்தரோடை, பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேநீர் அருந்துவதற்காக நீரைச் சூடாக்குவதற்கு அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலே சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தமையால் , அடுப்பு வெடித்து தீ பிடித்த போது பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் நேற்றைய தினம் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துசிதறிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 22 மணி நேரம் முன்
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
5 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி