திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை! - தென்னிலங்கையில் பரபரப்பு (காணொளி)
தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்சவின் சிலை இன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
டி.ஏ. ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சமல்ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் தந்தை ஆவார்.
கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு முதல் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளை எரித்து வருகின்றனர்.
தற்போது அவர்களால் டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நாளை வரை நடைமுறையில் உள்ள போதிலும் இந்த சம்பவம் இலங்கையில் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.