பசும்பால் மற்றும் பால் பைக்கட் விலையும் அதிகரித்தது
price
increase
dairy milk
By Sumithiran
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால்மாக்களின் விலைகளும் இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கு நிகராக விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பசும்பால் மற்றும் பைக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பால்மா விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மில்க்கோ நிறுவனம் இன்று பகல் வெளியிட்ட அறிவிப்பில் மேற்படி விலை 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளது.
பால் பண்ணை விவசாயிகளின் செலவுகள் அதிகரித்திருப்பதால் லீட்டருக்கான விலையும் உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.