நடிகை தமிதாவுக்கு விளக்கமறியல்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (04) பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று (05) பிற்பகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பயணத்தடை
தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் திலின கமகே தம்பதியினருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை புதன்கிழமை (03) விதித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்