ஈரானின் இராணுவ தலைமையகத்திலிருந்து ஐரோப்பாவுக்கு வந்த எச்சரிக்கை!
ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) தீவிரவாத அமைப்பாக அறிவித்ததை தொடர்ந்து, ஈரான் “பாதிப்புக்களுடன் கூடிய விளைவுகள்” ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய வெளியுறவுத் தலைவர்கள் பிரஸ்சல்ஸ் கூட்டத்தில் இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரான் அரசு தனது மக்களை வன்முறையால் அடக்கியதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வினை
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையானது, அல்கொய்தா, ஹமாஸ் மற்றும் ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் ஒரே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முடிவை நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், “தீவிரவாதமாக செயல்பட்டால், அதே முறையில் எதிர்வினை எதிர்கொள்வீர்கள்” ஈரானை கண்டித்துள்ளனர்.
ஈரானின் எச்சரிக்கை
ஈரான் இராணுவத் தலைமையகம் இந்த முடிவை “தார்மீகமற்ற, பொறுப்பற்ற, வெறுப்பானது” என விமர்சித்துள்ளதுடன், இது அமெரிக்கா, இஸ்ரேல் கொள்கைகளுக்கு இணங்கப்பட்ட நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், புரட்சிகர காவல் படையானது, ஐ.எஸ் போன்ற வன்முறைக் குழுக்களுடன் போராட முக்கிய பங்கு வகித்ததாகவும், இந்த முடிவின் விளைவுகள் நேரடியாக ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு வரும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |