கட்டுநாயக்கவில் கைதான டானிஸ் அலி அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவரா...!
Sri Lanka Police
Bandaranaike International Airport
Immigration
By Sumithiran
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் டுபாய் செல்வதற்காக விமானத்தில் ஏறிய போது கைது செய்யப்பட்ட போராட்டத்தின் செயற்பாட்டாளர் டானிஸ் அலி அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளி என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தகவல்களை பதிவிட்டுள்ள ஒருவர், மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று விசா நிபந்தனைகளை மீறி ஒரு வருட காலம் தலைமறைவாகியிருந்த டானிஸ் அலி அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுக்கு அடிமையாகி நாட்டிலுள்ள மற்றுமொரு நபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

