பிள்ளையான் வெளியிட்ட இரகசியம்: தீவிர விசாரணையில் காவல்துறை
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்படுவதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிள்ளையான் வெளிப்படுத்திய இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல்துறையினரின் கூற்றுப்படி,
72 மணி நேர விசாரணை
சந்தேக நபர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளியாவார். கொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் நேற்று கல்முனை பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதி என்றும் அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் மற்றும் சிவலிங்கம் தவசீலன் ஆகியோர் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக பல கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த இரகசிய தகவல்களைத் தொடர்ந்து இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
