கண்களுக்கு கீழ் கருவளையமா...! இந்த எண்ணெயை பயன்படுத்துங்க உடனடி பலன்
முகத்தில் ஏற்படும் பிரச்சினைகளில் கருவளையம் ஏற்படுவதும் ஒன்றாகும்.
நாம் என்னதான் முகத்தினை அழகுபடுத்தினாலும் கருவளையமானது அந்த அழகினை கெடுத்து விடும்.
கருவளையம் ஏற்படுவதற்கு தூக்கமின்மை, ஒவ்வாமை, தைராய்டு நிலைகள் மற்றும் முதுமை என பல காரணங்கள் உண்டு.
கருவளையம்
தோலின் நிறத்தைப் பொறுத்து கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் ஊதா அல்லது கருப்பு நிறமாகத் தோன்றலாம்.
எனவே, கருவளையங்களை இயற்கையான முறையில் எவ்வாறு நீக்கலாம் என பார்ப்போம்.
பாதாம் எண்ணைய்
கண்ணின் கருவளையத்தை நீக்குவதற்கு பாதாம் எண்ணைய் சிறந்த எண்ணைய்யாக பார்க்கப்படுகின்றது.
இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் கருவளையம் மறைந்து விடும்.
வைட்டமின் A D E மெக்னீசியம் கொழுப்பு மற்றும் அமிலங்களை கொண்ட பாதாம் எண்ணையை கருவளையம் உள்ள இடத்தில் தடவினால் ஒரு சில நாட்களில் கருவளையம் மறையும்.
இதை இரவு நேரத்தில் தடவி மசாஜ் செய்து வர உடனே கருவளையம் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |